ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா |

தங்கர்பச்சான் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி மற்றும் பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளிவந்த படம் 'அழகி'.
சிறு வயதில் காதலித்து பிரிந்து போன காதலியை சில பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் ஒரு முன்னாள் காதலனைப் பற்றிய கதைதான் 'அழகி'. வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட காதலனும், வேறொரு ஆணைத் திருமணம் செய்து கொண்ட காதலியும் மீண்டும் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதையும் இயல்பாய் காட்டிய படம்.
அப்போது பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற ஒரு படம். 22 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் வடிவில் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார்கள். அது பற்றி படத்தின் நாயகன் பார்த்திபன், “22 வருசங்களுக்கு பிறகு இந்த மாசம் 29ம் தேதி மீண்டும் என் '#அழகி'யை பாக்க போறேன்!.. என் மனசுக்குள்ள இருக்குற ஆசை யாருக்கு புரியும்..?!.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானவை. இளையராஜாவின் மகளும், மறைந்த பாடகியுமான பவதாரிணி இப்படத்தில் “டமக்கு டமக்குடம், ஒளியிலே தெரிவது தேவதையா” ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். சாதனா சர்கம் பாடிய 'பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி', இளையராஜா பாடிய 'உன் குத்தமா என் குத்தமா' மற்றும் புஷ்பவனம் குப்புசாமி, ஸ்வர்ணலதா பாடிய 'குருவி குடைஞ்ச கொய்யாபழம்' ஆகிய பாடல்களும் இப்படத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.