பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு |

முன்னணி நடிகை பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினரான மீரா சோப்ரா, தமிழில் கடந்த 2005-ல் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' படம் மூலம் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு மருதமலை, ஜாம்பவான், லீ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறையவே டில்லி திரும்பிய அவர் தந்தையின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்தார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான 'சாபட்' படத்தில் நடித்தார். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். 40 வயதாகும் மீரா சோப்ரா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த ரஷித் என்ற மும்பை தொழில் அதிபரை மணக்கிறார். சமீபத்தில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் 12ம் தேதி ஜெய்ப்பூர் சாலையில் அமைந்துள்ள ரிசார்ட்டில் ஒன்றில் திருமணம் நடக்க உள்ளது . நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். திருமண தகவலை மீரா சோப்ரா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. என்றாலும் அவரது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.