குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் |
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து தீவிர அரசியலில் இறங்க உள்ளார். தற்போது நடித்து வரும் 'த கோட்' படத்திற்குப் பிறகு அவருடைய 69வது படத்துடன் நடிப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
அந்த 69வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பலரது பெயர்கள் அடிபட்டு வந்தன. இந்நிலையில் இயக்குனர் எச். வினோத், அந்த 69வது படத்தை இயக்க உறுதி செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கமலின் 233வது படத்தை எச் வினோத் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. ஆனால், அப்படம் 'டிராப்' எனத் தகவல் வெளியானது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அடுத்து தனுஷ் அல்லது யோகி பாபு படத்தை வினோத் இயக்கப் பேச்சுவாத்தை நடத்தி வருவதாகவும் சொன்னார்கள்.
விஜய்யை சந்தித்தும் வினோத் ஒரு கதை சொன்னாராம். அந்தக் கதை பிடித்துப் போகவே விஜய்யும் சம்மதம் சொல்லிவிட்டாராம். தற்போதைய நிலவரப்படி இதுதான் விஜய் 69 படத்தின் அப்டேட்.