கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' | பிளாஷ்பேக்: தமிழில் 2 படங்கள் மட்டுமே இயக்கிய விட்டலாச்சார்யா | சிறிய படங்களுடனே முடிவுக்கு வரும் கோடை விடுமுறை | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் ஆசையை பூர்த்தி செய்த “தர்மம் எங்கே?” |
நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து விரைவில் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார். இது அல்லாமல் ஹிந்தியில் 'கர்ணா' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது.
இந்த நிலையில் புதிதாக சூர்யா, ‛இன்று நேற்று நாளை, அயலான்' படங்களின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்போது இந்த படத்திற்கான கதை விவாத பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.