நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி |

சரண் அறிமுக இயக்கத்தில், பரத்வாஜ் அறிமுக இசையில், அஜித், அறிமுக நடிகை மானு, அறிமுக நடிகர் எம்எஸ் விஸ்வநாதன், விவேக் மற்றும் பலர் நடிக்க 1998ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி வெளிவந்த படம் 'காதல் மன்னன்'. இப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இப்படம் குறித்து நினைவு கூர்ந்த இசையமைப்பாளர் பரத்வாஜ், அப்படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'உனை பார்த்த பின்பு நான், நானாக இல்லையே..,” பாடலைப் பாடி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “உங்கள் கண்களை மூடித் திறந்தால், 26 ஆண்டுகள் பறந்துவிட்டது. இந்த வெள்ளியன்று மாலை 6 மணிக்கு அப்டேட் ஒன்றைத் தரப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
'காதல் மன்னன்' படம் ஒரு அழகான காதல் படமாக அமைந்து 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. பரத்வாஜ் இசையில் அமைந்த பாடல்களும் அதற்கு ஒரு காரணம். இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மானு பின்னர் எந்தப் படத்திலும் நடிக்கவேயில்லை.
நகைச்சுவை நடிகர் விவேக் இந்தப் படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றினார். படம் வெளிவந்த பின் நடந்த பிரச்சனையில் சரணும், விவேக்கும் பிரிந்தனர்.
அஜித்தின் துள்ளலான, இனிமையான காதல் படங்களில் 'காதல் மன்னன்' படமும் மறக்க முடியாத ஒரு படம்.




