100 மில்லியனைக் கடந்த 'மோனிகா' வீடியோ பாடல் : அனிருத்திற்கு 45 | மவுனப் படம் என்றாலும் 5 மொழி சான்றிதழ் பெற்றுள்ள 'காந்தி டாக்ஸ்' | வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் : நகுல் | சுயசரிதை எழுதும் ரஜினி : மகள் தகவல் | சர்வதேச பட விழாவுக்கு செம்மலர் அன்னமின் படம் தேர்வு | ‛காந்தாரா' கடவுள் கிண்டல் : ரன்வீர் சிங் மீது பாய்ந்தது வழக்கு | பிளாஷ்பேக் : இயக்குனராக சாதித்த நடன கலைஞர் | பிளாஷ்பேக் : உலகம் அறியாத நட்பு | பிளாஷ்பேக் : ரஜினி, கமலை பிரித்த பஞ்சு அருணாச்சலம் | பிளாஷ்பேக் : 'மகாதேவி'யில் கண்ணதாசனிடம் பாடலை மாற்ற சொன்ன எம்ஜிஆர் |

தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். நேற்று அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இதை அடுத்து மீனாட்சி சவுத்ரிக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, கோட் படத்தில் அவர் ஸ்ரீநிதி என்ற வேடத்தில் நடித்து வருவதாக ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
கோட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து வெங்கட்பிரபுவை நச்சரித்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு ரசிகர் வெங்கட்பிரபுவை தகாத வார்த்தைகளால் திட்டி சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்தச்சூழலில் இதுதானா சார் உங்கு டக்கு... என்கிற பாணியில் இது தானா உங்க அப்டேட் என மீனாட்சியின் கேரக்டர் பெயரை வெளியிட்டதை குறிப்பிட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.




