நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்கே சுரேஷ் இயக்க உள்ள 'தென் மாவட்டம்' என்ற புதிய படத்தின் முதல் பார்வையை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதில் இசை - யுவன்ஷங்கர் ராஜா என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இப்படத்திற்காக தன்னை யாரும் அணுகவில்லை, தான் ஒப்பந்தமாகவில்லை என யுவன் சமூக வலைத்தளத்தில் விளக்கம் சொல்லியிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்கே சுரேஷ் உங்களது ஒப்பந்தத்தைப் பாருங்கள் எனக் கூறியிருந்தார்.
இது என்ன புது சர்ச்சை என ரசிகர்களும், திரையுலகினரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்நிலையில், “தென் மாவட்டம்' படத்தின் புதிய இசை அமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படும, நன்றி யுவன்,” என ஆர்கே சுரேஷ் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இரு தரப்பிலும் பேசி சுமூக முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.