அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

மலையாள திரை உலகில் பிரபல குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் சீனிவாசனின் வாரிசாக திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் வினீத் சீனிவாசன். ஆனால் தனது திறமையால் சிறந்த இயக்குனராகவும் சிறந்த நடிகராகவும் வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரி செய்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லாலின் மகன் பிரணவ் நடிப்பில் 'ஹிருதயம்' என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் வினித் சீனிவாசன். அதனைத் தொடர்ந்து தற்போது 'வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதிலும் பிரணவ் தான் கதாநாயகனாக நடிக்கிறார். வினீத் சீனிவாசனின் ஆஸ்தான ஹீரோவான நிவின்பாலியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருப்பதை தொடர்ந்து இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படம் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்பட இருக்கிறது.
மேலும் மொத்தம் மூன்று மணி நேரம் ஓடும் விதமாக இந்தப்படம் உருவாகி இருப்பதாக படக்குழுவில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. மலையாளத்தில் பெரும்பாலும் இரண்டரை மணி நேரம் மட்டுமே ஓடும் விதமாக படங்கள் வெளியாகி வரும் வேளையில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி இருப்பதாலும் கதைக்கு தேவைப்படுவதாலும் துணிந்து மூன்று மணி நேர படமாக இதை ரிலீஸ் செய்கிறாராம் வினீத் சீனிவாசன்.