போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
தனுஷ் இயக்குனராக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கின்றார். அனைக்கா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர். கே. புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பல கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்போது ஜி.வி.பிரகாஷ் அளித்த பேட்டி ஒன்றில், "தனுஷ் இயக்கி வரும் படத்திற்கு நான்கு பாடல்களை இசையமைத்துள்ளேன். நன்றாக வந்துள்ளது. ஆல்பம் ஆப் தி இயர் ஆக இருக்கும். இப்படத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்" ஜி.வி. பிரகாஷ்.