மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி |

பாரம்பரிம் மிக்க சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தார், அவர்களது திரைப்படங்களில் பயன்படுத்திய கார்கள், பைக்குகள், இதர பொருட்கள் என பலவற்றை அவர்களது ஸ்டுடியோவில் வைத்து நிரந்தரக் கண்காட்சி ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
அந்நிறுவனம் தயாரித்து ரஜினிகாந்த், ராதா, ஜெய்சங்கர் மற்றும் பலர் நடித்து 1983ம் ஆண்டு வெளிவந்த படம் 'பாயும் புலி'. அப்படத்தில் ரஜினிகாந்த் பைக் ஒன்றைப் பயன்படுத்தியிருப்பார். சுசூகி ஆர்வி 90, 1976 மாடல் பைக் அது. டிஎம்கே 111 என்ற பதிவு எண் கொண்ட அந்த பைக் அகல டயர்களுடன் அசத்தலான மாடலில் இருக்கும்.
கண்காட்சிக்கு வந்த போது அந்த பைக் மீது ஆசையுடன் அமர்ந்து ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அந்நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் படங்களில் அவர் பயன்படுத்திய கார், பைக்குகள் ஆகியவை மறக்க முடியாது. அப்படி ஒரு நினைவு சின்னமாக இருக்கும் அந்த பைக்குடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.