சம்பளமா... இசை உரிமையா... எது வேண்டும்? : மலையாள தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடு | ரீ ரிலீஸில் வசூலை அள்ளும் சனம் தேரி கசம் : தயாரிப்பாளர், இயக்குனர் உரிமை மோதல் | மதராஸி - மீண்டும் பழைய படப் பெயருடன் சிவகார்த்திகேயன் | பில்கேட்ஸிற்கு டீ கொடுத்த சாய்வாலா உடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்ட அர்பாஸ் கான் | சீரியல்களுக்கு பாட்டு எழுதுவது தான் கஷ்டம் - பா.விஜய் | 101 வயதில் மறைந்த தெலுங்கு நடிகை கிருஷ்ணவேணி | பிப்ரவரி 21ல் 5 படங்கள் ரிலீஸ் | தண்டேல் : நாக சைதன்யாவின் முதல் 100 கோடி | மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! |
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 234வது படமாக 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஜஸ்வர்யா லஷ்மி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்னர் செர்பியா நாட்டில் சமீபத்தில் கமல், த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி வந்தனர். தற்போது தக் லைப் படக்குழு சென்னை திரும்பியுள்ளனர். வருகின்ற மார்ச் 4ம் தேதி முதல் சென்னையில் தக் லைப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக மூன்று இடங்களில் பிரமாண்டமான அரங்குகளை அமைந்துள்ளனர். இதில் கமல், ஜெயம் ரவி, த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளனர் என கூறப்படுகிறது.