நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஏ.ஆர் ரஹ்மான் தமிழ், ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தியது போல மற்ற மொழிகளில் பெரிய அளவில் இசையமைத்தது இல்லை. நீண்ட இடைவெளிக்கு பின் பிரித்விராஜ் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகி வந்த ‛ஆடு ஜீவிதம்' என்கிற படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதன் மூலம் மலையாளத்தில் மறுபிரவேசம் செய்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.
வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் கொச்சிக்கு வருகை தந்த ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கான பிரத்யேக வெப்சைட் ஒன்றை துவங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கொச்சியை சுற்றிப் பார்த்த ஏ.ஆர் ரஹ்மான் கொச்சின் மெட்ரோவில் பயணம் செய்தார். ரசிகைகள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. ஆடுஜீவிதம் புரமோசனின் ஒரு பகுதியாகத் தான் ஏ.ஆர் ரஹ்மானின் இந்த மெட்ரோ பயணம் என்று கூட ஒரு தகவல் வெளியாகி உள்ளது.