இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மன்சூரலிகான் அளித்த ஒரு பேட்டியில் நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, ரோஜா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர அனுமதி கேட்டு மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் மனு செய்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து, மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.
இதை மறு ஆய்வு செய்யக் கோரி மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. மன்சூரலிகான் தரப்பு கருத்தை கேட்ட நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மனு தள்ளுபடி உறுதி செய்யப்படுகிறது, என்று தீர்ப்பளித்தது.
மன்சூரலிகானுக்கு நீதிமன்றம் தெரிவித்த கண்டனம் நீதிமன்ற பதிவேட்டில் தொடர்ந்து இருக்கும், இனி இதுபோன்று தேவையற்ற வழக்கு தொடர்ந்தால் அப்போது இந்த கண்டனம் கவனத்தில் கொள்ளபப்படும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.