துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. தனுஷின் ‛3', கவுதம் கார்த்திக்கின் ‛வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் அவரது இயக்கத்தில் ‛லால் சலாம்' படம் வெளியானது. விஷ்ணு விஷால், விக்ராந்த முதன்மை வேடங்களில் நடிக்க, ரஜினி சிறப்பு வேடத்தில் நடித்தார். கிரிக்கெட் விளையாட்டுடன் மதநல்லிணக்கத்தையும் பேசிய இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது. இதில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாம். விரைவில் அறிவப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.