'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் இயக்குனர்கள் பலர் பாலிவுட்டில் படம் இயக்கி உள்ளனர். மணிரத்னம், பாக்யராஜ், பாலச்சந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரபுதேவ, ஏ.ஆர்.முருகதாஸ் என இந்த பட்டியல் நீளமானது. தற்போது அட்லி, விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட சில இளம் இயக்குனர்கள் பாலிவுட்டில் படம் இயக்குகிறார்கள். இந்த நிலையில் அடுத்து பாலிவுட்டுக்கு செல்கிறார் கிருஷ்ணா.
தமிழில் சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய இவர் கடைசியாக சிம்பு நடித்த 'பத்து தல' படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஓரளவுக்கு வெற்றி பெற்றது. தற்போது அவர் பாலிவுட் படத்தை இயக்குகிறார். மும்பையில் தயாரிப்பு அலுவலகம் திறந்துள்ள ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா அங்கு படங்களை தயாரிக்க இருக்கிறார். அதில் ஒரு படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற கலைஞர்கள், தொழில்நுட் கலைஞர்களுடன் விரையில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.