சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கன்னடத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே தென்னிந்திய அளவில் புகழ்பெற்று நேஷனல் கிரஸ் என்று அனைவராலும் அழைக்கப்படும் அளவிற்கு முன்னணி நடிகையாக மாறிய ராஷ்மிகா மந்தனா கடந்த வருடம் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்தார். அவர் நடித்த முதல் இரண்டு படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ.900 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது.
அதே சமயம் இந்தப்படம் பெண்களை ரொம்பவும் மட்டமாக சித்தரித்து இருக்கிறது என்று படம் வெளியான நாளிலிருந்து பல விமர்சனங்கள் எழுந்தன. அதற்கேற்றவாறு நடிகை ராஷ்மிகாவும் இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டங்களில் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. ரிலீஸுக்கு பிறகு படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அனிமல் படத்தின் வெற்றியை ஏன் சொந்தம் கொண்டாடவில்லை என்பது குறித்து ஒரு நீண்ட விளக்கம் அளித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
அதில் அவர் கூறும்போது, “என் மீது கொண்டுள்ள அன்பு, அக்கறை மற்றும் கவலை காரணமாகத்தான் இப்படி கேட்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நாங்கள் ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்திருக்கிறோம். மக்களும் அதை விரும்பி பார்த்து பாராட்டினார்கள். நானும் அதை அனுபவிப்பதற்காக கொஞ்ச காலம் எடுத்துக் கொண்டேன். ஆனால் அந்த படம் வெளியான உடனேயே நான் அடுத்து நடித்து வரும் எனது படத்தின் படப்பிடிப்பிற்காக தொடர்ந்து பணியாற்ற கிளம்ப விட்டதால் இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவோ படம் குறித்து மீடியாக்களில் அதிக அளவில் பேட்டி அளிக்கவோ முடியாமல் போனது” என்று கூறியுள்ளார்.