தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி |

பிரபல பாலிவுட் மற்றும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ், 72, உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்.
ஹிந்தி சினிமாவில் பிரபல பாடகராக வலம் வந்தவர் பங்கஜ் உதாஸ். பல்வேறு இசை ஆல்பங்களிலும் பாடி உள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(பிப்., 26) சிகிச்சை பலனின்றி காலமானார்.
குஜராத்தில் பிறந்த பங்கஜ், 1970களில் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். 1986ல் வெளியான 'நாம்' படத்தில் இடம்பெற்ற 'சிட்டி ஆயி ஹை' என்ற பாடல் பங்கஜ் உதாஸை பிரபலமாக்கியது. தொடர்ந்து ஹிந்தியில் பல நூறு பாடல்களை பாடி உள்ளார். இசை மற்றும் கலை உலகில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு கடந்த 2006ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
பங்கஜ் உதாஸ் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




