ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே வெங்கட் பிரபுவின் ஆதர்ச நடிகர்களாக இருக்கும் பலரும் அவர் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுவார்கள். அந்த வகையில் சரோஜா படத்தின் மூலம் வெங்கட் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் வைபவ் வழக்கம் போல இந்த கோட் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாள் விஜய், வெங்கட் பிரபுவிடம் எடுக்கப்பட இருக்கும் காட்சி குறித்து சீரியசாக தனது சந்தேகங்களை கேட்க அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் அருகில் இருந்த வைபவ்வோ இதுபற்றி எதுவும் புரியாதவர் போல அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது விஜய் அவரிடம் என்னடா முழிக்கிற உனக்கு எதுவும் சந்தேகம் இல்லையா என்று கேட்டுள்ளார்.
உங்களுக்கு கதை தெரியும்.. அதனால் நீங்கள் சந்தேகம் கேட்கிறீர்கள்.. எனக்கு கதை என்னவென்றே தெரியாது என்று கூற உடனே விஜய் சிரித்து விட்டாராம். படம் துவங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது இன்னுமா கதை தெரியவில்லை என்று கேட்க, அதற்கு வெங்கட் பிரபு அவனுக்கு எல்லாமே தெரியும் என்று கூறி சமாளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சுவாரசிய தகவலை கூறியுள்ளார் வைபவ்