தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தொடர்ந்து விஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கி அதன் மூலம் பாலிவுட்டில் நடிகர் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் பாலிவுட்டிலும் ஆயிரம் கோடி வசூல் செய்த வெற்றி படமாக ஜவானை மாற்றினார் அட்லீ. மேலும் இந்த படத்தின் மூலம் அனிருத், விஜய்சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு ஆகியோரையும் தன்னுடன் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார் அட்லீ.
இதில் படத்தின் கதாநாயகி நயன்தாராவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான ஒரு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரியாமணியை எப்போதுமே அட்லீ, புலி அல்லது புலி மணி என்று தான் அழைப்பாராம். படத்தின் கதையை அட்லீ சொன்ன அந்த முதல்நாளில் இருந்து ஜாலியாக பழக ஆரம்பித்ததுடன் படப்பிடிப்பு நாட்களில் எப்போதுமே இந்த பெயரை தான் கூறி தான் பிரியாமணியை அழைப்பாராம் அட்லீ. மீண்டும் அட்லீயுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்வி சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்டபோது இந்த தகவலை கூறியுள்ளார் பிரியாமணி.