ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் | நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசை : 'தேவரா' விழாவில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி பேச்சு | நடிகைகள் குறித்து அவதூறு பேசும் காந்தாராஜ், பயில்வான் ரங்கநாதன் மீது நடிவடிக்கை: மாதர் சங்கம் கோரிக்கை | நடன மங்கை, நாயகி, நடுங்க செய்த வில்லி : நடிகை சிஐடி சகுந்தலாவின் வாழ்க்கை பயணம் | நடன இயக்குனர் ஜானி இடை நீக்கம் : தெலுங்கு பிலிம் சேம்பர் அதிரடி | இயக்குனர் திரிவிக்ரமை கேள்வி கேட்பார்களா ? - நடிகை பூனம் கவுர் | மகளுக்கு நிகரான மாடர்ன் உடையில் ஷிவானி தாயார்: வறுத்தெடுக்கும் ரசிகர்கள் | 'சிங்கிளாக இருப்பது போர் ': விவாகரத்தை கொண்டாடிய ஷாலு புலம்பல் | சென்னையில் அவசர அவசரமாக நடந்த 'தேவரா' நிகழ்ச்சி |
'பருத்தி வீரன்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி. அதன்பின் தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் மற்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். ஹிந்தியில் 'ஜவான்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகைகள் 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்களை வரவழைத்து ஏர்போர்ட், ஜிம் ஆகிய இடங்களில் போட்டோக்கள், வீடியோக்கள் எடுப்பது பற்றிய ரகசியத்தை உடைத்துள்ளார்.
சில நடிகைகள் அவர்கள் செல்லுமிடங்களைப் பற்றி ஏஜென்சிக்களிடம் சொல்லி விடுவார்கள். அந்த ஏஜென்சிக்கள், புகைப்படக் கலைஞர்களை அந்த நடிகைகள் செல்லுமிடங்களுக்கு போக வைத்து புகைப்படம், வீடியோக்களை எடுக்க வைப்பார்கள்.
பின்னர் அவற்றைப் பகிர்ந்து யதேச்சையாக சென்றது போல 'Spotted' என தலைப்பிட்டு, ஏர்போர்ட், ஜிம் இடங்களில் நடிகைகள்… என சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அது ஒரு டிரென்டாகவே தற்போது மாறிவிட்டது. அதற்காக அவர்கள் தரும் விலை அதிகம் என்றோ, குறைவு என்றோ சொல்ல மாட்டேன். என்னிடமும் அது போல செய்து தர வேண்டுமா என என்னிடமும் கேட்டார்கள், அப்படியான கவனம் எனக்குத் தேவையில்லை என சொல்லிவிட்டேன். இந்த கலாச்சாரம் தற்போது தென்னிந்தியத் திரையுலகத்திலும் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யு டியூப் ஷார்ட்ஸ் ஆகியவற்றைப் பார்த்தால் அவர் சொல்வது உண்மைதான் என ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம்.