சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்வேதா. இந்த சீரியலில் பள்ளி செல்லும் நாயகி தமிழ்ச்செல்விக்கு காதல் விவகாரத்தால் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர். அதுபோலவே தனது நிஜ வாழ்விலும் பள்ளி படிக்கும் போது பல லவ் டார்ச்சர்களை சந்தித்ததாக ஸ்வேதா கூறியுள்ளார்.
'பள்ளியில் படிக்கும் போது ஒரு பையன் எனக்கு பேனா கொடுத்ததை பார்த்து பொறாமை பட்ட இன்னொரு பையன், நம்ம கல்யாணத்துக்கு நான் சீட்டு போட்டு வச்சுருக்கேன், நீ அவன்கிட்ட பேசுறியேன்னு கேட்டான். இன்னொருவன் பிரின்ஸிபால் ரூம் பக்கத்தில் என்னுடைய பெயரையும் அவனின் பெயரையும் எழுதி வைத்திருந்தான். அதேபோல இன்னொருவன் கையை அறுத்துக்கொண்டு வாட்சப்பில் போட்டோ அனுப்பினான்' என்று தனக்கு வந்த லவ் புரொபோஸல்கள் குறித்து அந்த பேட்டியில் கலகலப்பாக கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தங்களது புரொபோஸல்களையும் தெரிவித்து வருகின்றனர்.