ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா | வெற்றி தீபம்... ஜனநாயகத்தின் ஒளி... : அரசியல் படமா... ‛விஜய் 69' | திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் | ‛வேட்டையன்' படம் பற்றி மஞ்சு வாரியர் என்ன சொல்கிறார் | அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது | மீண்டும் ஜோடி சேரும் விஜய், பூஜா ஹெக்டே | என் தந்தையே எனது மிகப்பெரிய விமர்சகர் : பாடகி டூ நடிகை த்வானி பனுஷாலி பேட்டி | ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி |
நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், 'கோவை மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் குளிக்க செல்பவர்கள் அடிக்கடி சிக்கி உயிரிழக்கிறார்கள். குளித்துக் கொண்டிருப்பவர்களை தண்ணீருக்குள் இழுத்து பாறையில் சிக்க வைத்து சிலர் உயிரிழக்க செய்கிறார்கள். பின்னர் அவர்களே வெளியே வந்து உறவினர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, மீண்டும் அந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எனவே அந்த பகுதியில் குளிப்பவர்கள் கவனமாக இருங்கள்' என்று அந்த வீடியோவில் பேசி இருந்தார்.
இந்த வீடியோ வைரல் ஆனது. கோவை மாவட்ட காவல் துறையும், உண்மை கண்டறியும் குழுவும் பாக்யராஜின் வீடியோவுக்கு விளக்கம் அளித்திருந்தது. பாக்யராஜ் வதந்தியை பரப்புவதாக அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. தற்போது இதுகுறித்து பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ஒரு படப்பிடிப்புக்காக மேட்டுப்பாளையம் சென்றபோது அப்பகுதி மக்கள் மூலமாக, நான் கேள்விப்பட்ட விஷயங்களைதான் வீடியோவில் தெரிவித்து இருந்தேன். மற்றபடி இந்த விஷயத்தால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை. காவல்துறை பற்றி குறை கூறவும் இல்லை. சொன்னதின் நோக்கமே மீண்டும் இது போன்று நடந்து விடக்கூடாது என்பதற்காகத் தான். ஆனால் இதை சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவோடு தொடர்பு படுத்திவிட்டார்கள். காவல் துறையை நான் சம்மந்தப்படுத்தி பேசவில்லை. ஆனால், இப்போது திருப்பி நான் விசாரித்த போது, 15 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்தது” என்று பேசி உள்ளார்.