உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பிரசாத் ராமர். தற்போது இயக்கி உள்ள படம் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே'. பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பிரதீப் குமார் தயாரித்துள்ளார். செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரனும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர்த்து சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம்.அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசை அமைத்துள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பிரசாத் ராமர் கூறியதாவது : சிறிய நகரத்தில் உள்ள இளைஞர்களை சுற்றி நகரும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. சாலை பயணத்தை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கிறது. மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. இதன் படப்பிடிப்பு மதுரை மற்றும் மாயவரம் ஆகிய இடங்களில் 42 நாட்கள் நடந்துள்ளது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.