பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் |
பெங்களூரை சேர்ந்த மனிஷா யாதவ் 'வழக்கு எண்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லன்னா நயன்தார, 'சென்னை 28 இரண்டாம் பாகம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகள் இன்றி பெங்களூரு திரும்பிய மனிஷா சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'நினைவெல்லாம் நீயடா' என்ற படம் வருகிற 23ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிலந்தி, ரணதந்திரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கி உள்ளார். ராயல் பாபு தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் மனிஷா, தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக 'நினைவெல்லாம் நீயடா' படத்தின் தயாரிப்பாளர் மீது புகார் தெரிவித்து உள்ளார். நடிகர் சங்கத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''நான் நினைவெல்லாம் நீயடா படத்தில் நடித்து இருக்கிறேன். அந்த படத்துக்கு பேசிய சம்பளத்தில் 3 லட்சம் தராமல் பாக்கி வைத்துள்ளனர். எனவே படம் வெளியாகும் சூழலில் அதனை வசூலித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகார் மனுவை தயாரிப்பாளர் சங்கத்துக்கு, நடிகர் சங்கம் அனுப்பி வைத்துள்ளது.