ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
ஏஆர் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் அஜ்மல்கான், தயாரிக்கும் படம் 'லெவன்'. இயக்குநர் சுந்தர் சி.யிடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன்', மற்றும் 'ஆக்ஷன்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். சரபம், சிவப்பு, பிரம்மன் மற்றும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடித்திருக்கிறார். 'விருமாண்டி' அபிராமி, 'வத்திக்குச்சி' திலீபன், 'மெட்ராஸ்' ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டி. இமான் அமைக்க, கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் கூறும்போது “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.