துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' |
நடிகர் பஹத் பாசில் கடந்த இரண்டு வருடங்களில் தெலுங்கு, தமிழ் திரையுலகில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் முக்கிய வேடங்களிலும் நடித்து வந்தார். அந்த வகையில் புஷ்பா 2, விக்ரம், மாமன்னன் ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வரவேற்பை பெற்றன. தற்போது ரஜினியுடன் இணைந்து ‛வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் கன்னட இயக்குனர் டைரக்சனில் அவர் நடித்த தூமம் திரைப்படம் வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மலையாளத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ள பஹத் பாசில் ‛கராத்தே சந்திரன்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் திரையுலகில் தொடர் சரிவை சந்தித்து வந்தபோது அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் மகேஷிண்டே பிரதிகாரம். இந்த படத்தின் இயக்குனர் திலீஷ் போத்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராய் என்பவர் இந்த கராத்தே சந்திரன் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மலையாளத்தில் சமீபத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் 'பிரேமலு' படத்தை தயாரித்த பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக டைட்டில் போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.