மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! |
சந்தானம் நடித்து கடந்த 2ம் தேதி திரைக்கு வந்த படம் ‛வடக்குப்பட்டி ராமசாமி'. இப்படத்தின் டிரைலர் வெளியானபோது, ‛கடவுளே இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிந்தானே அந்த ராமசாமியா நீ' என்று படத்தில் இடம்பெற்ற டயலாக் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவே இப்படத்துக்கு பெரிய விளம்பரமாகவும் அமைந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் நேற்று இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு எழுந்த ஈ.வே.ரா சர்ச்சை குறித்து சந்தானம் கூறுகையில், இப்படத்தில் ஈ.வே.ரா.,வின் பெயரை எந்த இடத்திலும் நாங்கள் குறிப்பிடவில்லை. வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணியின் டயலாக். அதைத்தான் இயக்குனர் இப்படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார். குறிப்பாக, கடவுளை வைத்து காசு பண்றது தப்பு. அதே கடவுள் நம்பிக்கையை வைத்து அரசியல் பண்றதும், பிரச்னை பண்றதும் தப்பு என்று தான் இந்த படத்தில் கூறி இருக்கிறோம் என்று ஒரு விளக்கம் கொடுத்தார்.
மேலும் இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே சோசியல் மீடியாவில், சந்தானம் சங்கி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறதே என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் ஆறாவது படித்து வந்த போது சங்கீதா என்ற ஒரு பெண்ணை காதலித்தேன். அப்போது அவரை சங்கி சங்கி என்று தான் அழைப்பேன். அதனால் அவர் சங்கி ஆகி விடுவாரா என்று அந்த கேள்விக்கு ஒரு நறுக் பதில் கொடுத்தார் சந்தானம்.