படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். அப்படத்தில் ராம்சரண் -ஜூனியர் என்டிஆர் நடித்தனர். அந்த படத்தை தொடர்ந்து மகேஷ்பாபு நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் ராஜமவுலி. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளில் நடைபெற உள்ளது. அதோடு இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சம்பந்தப்பட்ட பணிகள் இப்போதே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தனது புதிய படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க இந்தோனேசியா நடிகையான செல்சியா இஸ்லான் என்பவரை ராஜமவுலி தேர்வு செய்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் தவிர வெளிநாடுகளை சார்ந்த இன்னும் சில நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.