குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
படப்பிடிப்புக்கு செல்லும் போதும், சென்னை திரும்பும் போதும் விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பத்திரிகை நிருபர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அவரிடம் அரசியல் ரீதியிலும், சினிமா ரீதியிலும் கேள்விகள் கேட்கப்படும். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினி அளிக்கும் பதில் அவ்வப்போது பரபரப்பையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்துவது உண்டு.
சில நாட்களுக்கு முன்னர், ரஜினியிடம், ‛‛நடிகர் விஜய் அரசியல் கட்சி துவக்கம்'' குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒரே வார்த்தையில் ‛வாழ்த்துகள்' என பதிலளித்து விட்டு சென்றார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை ரஜினி சந்தித்தார். அப்போது, அவரிடம் நடிகர் விஜய், விஷால் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, ‛‛அரசியல் ரீதியில் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்'' என்றார். மேலும், லால் சலாம் படம் பெரும் வெற்றி அடைந்ததாகவும், வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறினார்.