ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் | உரிமைக்குரல், நட்புக்காக, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |

லோக்சபா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அம்மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சில பல புதிய படங்கள் வெளியாகும். அதோடு பள்ளிப் படிப்பிற்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையும் ஆரம்பமாகும். எனவே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆறு வாரங்களுக்கு பல புதிய படங்கள் வெளியாகும்.
இந்நிலையில் அந்த சமயத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பரபரப்புக்கிடையில் மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படங்களைப் பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். சினிமா போஸ்டர்கள் ஒட்ட இடம் கிடைக்காது. தேர்தல் பிரசாரங்களால் ஒவ்வொரு ஊருமே போக்குவரத்து நெரிசல், பரபரப்பு என இருக்கும். வெயிலின் தாக்கமும் இந்த வருடம் அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானால் அதற்கான கொண்டாட்டங்கள் வேறு இருக்கும்.
இத்தனை காரணங்களால் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாவதாக சொல்லப்பட்ட படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போக வாய்ப்புகள் உள்ளது.