ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

நடிகராக 21 வருடங்களை கடந்திருக்கிறார் ஜீவா. சில படங்களை அப்பாவின் சூப்பர் குட் பிலிம்சுக்காக தயாரிக்கவும் செய்திருக்கிறார். தற்போது அடுத்து கட்டமாக 'டெப் பிராக்ஸ்' என்ற புதிய இசை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது சுயாதீன இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நிறுவனமாக செயல்பட இருக்கிறது.
இதன் துவக்க விழாவில் ஜித்தன் ரமேஷ், ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், மிர்ச்சி சிவா, விச்சு விஸ்வநாத், விவேக் பிரசன்னா, கலையரசன், ஆதவ் கண்ணதாசன், ஜெகன், நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த் விபின், சந்தோஷ் நாராயணன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நடிகர் ஜீவா பேசும்போது, "கடந்த ஒரு வருடமாக இந்த 'டெப் பிராக்ஸ்' மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 'சூப்பர் ஸ்டார்' ரஜினி சொன்ன மாதிரி 'யார் சொல்வததையும் கேட்காமல் நமது வேலையை நாம் செய்து கொண்டே முன்னேற வேண்டும்' என்பதை அடிப்படையாக வைத்து இந்நிறுவனத்தை தொடங்கி உள்ளோம். என்றார்.