ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‛தி கோட்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து கார்த்தி சுப்பராஜ் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்கப்போகிறார். இந்த நிலையில் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ரத்ததான முகாம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக் என இலவச சேவைகளையும் தொடங்கி இருக்கிறார் விஜய். அதோடு 10-ம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகையும் அளித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பனையூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பிப்ரவரி மாதத்தில் டில்லி சென்று அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்து விட்டு உடனடியாக கட்சியின் பெயரை அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் விஜய் கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நடத்தப்பட்ட ஆலோசனையில், தமிழக முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைக்க ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாக விஜய் வட்டாரங்களில் ஒரு தகவல் கசிந்துள்ளது.




