டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மலையாள திரையுலகில் இன்று அதிக படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகர் என்றால் அது நடிகர் டொவினோ தாமஸ் தான். அவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் அஜயன்டே இரண்டாம் மோஷனம் என்கிற படம் வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது. நடிகர் திலகம் என்கிற பெயரில் அவர் நடித்து வரும் இன்னொரு படம் 70களின் காலகட்டத்தை சேர்ந்த திரையுலக பின்னணி கொண்ட படமாக உருவாகி வருகிறது. இன்னொரு பக்கம் இவர் நடித்து வரும் ஐடென்டி என்கிற படம் கிரைம் திரில்லர் ஆக உருவாகி வருகிறது. இந்த நிலையில் மின்னல் முரளி படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு பேண்டஸி படத்தில் நடிக்கிறார் டொவினோ தாமஸ்.
'முன்பே' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டொவினோ தாமஸ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை பகிர்ந்து கொண்டுள்ள டொவினோ தாமஸ், “நீங்கள் இழந்த ஒன்றை திரும்ப பெறுவதற்காக எந்த எல்லைக்கு செல்வீர்கள் ?” என்கிற கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்றபடி நழுவிச்செல்லும் தனது காதலியை பிடிப்பதற்காக பாதாளத்தை நோக்கியோ அல்லது விண்வெளியை நோக்கியோ டொவினோ தாமஸ் பறந்து செல்வது போல இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.