நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுசி கணேசன் உதவியாளர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாகவும், விஜித், கயல் ஆனந்தியின் ஜோடியாகவும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஜோகன் செவனேஷ் இசையமைக்கிறார்.
'ராவணக்கூட்டம்' படத்திற்கு பிறகு கயல் ஆனந்தி நடிக்கும் படம் இது. கமலி ப்ரம் நடுக்காவேரி, என் ஆளோட செருப்ப காணோம் படங்களுக்குப் பிறகு ஆனந்தி சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.