நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயிலில் நாளை (ஜன.,22) கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. மதியம் 12:20 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர். இதனையடுத்து இன்று (ஜன.,21) நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக காரில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி. 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒரு பிரச்னை இது. உச்சநீதிமன்றம் இதற்கு தீர்வு கொடுத்தது. தற்போது அது நிறைவேறியிருக்கிறது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.
நடிகர் தனுஷூம் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அயோத்தி புறப்பட்டார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.