காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா |
தெலுங்கு திரையுலகில் மிகக்குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டவர் இளம் நடிகை ஸ்ரீ லீலா. சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி உள்ள குண்டூர் காரம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்களின் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்த நிலையில் இவரது பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இவரை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வந்தன. அதில் பெரும்பாலானவை ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் ஆல்கஹால் சம்பந்தப்பட்ட பொருட்களை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் தான்..
ஆனால் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ள ஸ்ரீ லீலா இந்த விளம்பரங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய அளவில் சம்பளம் தருவதாக சொல்லப்பட்டும் கூட இவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம். சில முன்னணி நடிகர்கள் இதுபோன்ற விளம்பரங்களின் நடித்துவிட்டு மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், தாங்கள் நடித்த விளம்பரங்களுக்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு சமாளிப்பதையும் சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஸ்ரீ லீலாவின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என ரசிகர்கள் கூறி உள்ளனர்.