லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
இது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டத்தில் நடைபெறும் படம் என்பதால் இதில் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் சூர்யா நடிக்கின்றார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஜன., 16) கங்குவா படத்திலிருந்து இரண்டாம் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. சூர்யாவின் இரண்டு தோற்றத்துடன் படக்குழு வெளியிட்டுள்ளனர்.