வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அதன்பிறகு அவர் நடித்து வெளிவந்த “சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ், சலார்' ஆகிய படங்கள் 'பாகுபலி 2' படத்தின் வரவேற்பையும், வெற்றியையும் பெறவில்லை. இருந்தாலும் தொடர்ந்து சில பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.
'கல்கி 2898 ஏடி' மற்றும் மாருதி இயக்கத்தில் ஒரு படம் என அவர் நடிக்கும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பொங்கலை முன்னிட்டு மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியானது. படத்திற்கு 'ராஜா சாப்' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
போஸ்டரில் பிரபாஸ் பெயர் ஆங்கிலத்தில் 'Prabhass' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை 'Prabhas' என்று இருந்ததில் கூடுதலாக ஒரு 's' சேர்த்திருக்கிறார். எதற்காக இந்த மாற்றம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள். நியூமராலஜிபடி அவர் மாற்றியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அதே சமயம் 'பாகுபலி 2' போன்றதொரு வெற்றியைப் பெற பெயரில் இப்படி மாற்றம் செய்திருக்கலாம் என்றும் கூட நினைக்க வாய்ப்புள்ளது.
பிரபாஸின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இப்படி எதுவும் மாற்றப்படவில்லை. ஒருவேளை தவறுதலாக ஒரு 's' ஐ சேர்த்திருக்கவும் வாய்ப்புள்ளது. ரசிகர்களுக்கு எப்படியெல்லாம் ஒரு டவுட்டு வருகிறது.