புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவு பெற்றது. இந்த சீசனின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வானார் . இரண்டாம் இடத்தை மணியும், மூன்றாவது இடத்தை மாயாவும் பெற்றனர்.
விஜய் டிவியில் கமல்ஹாசன் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது. மாயா, விசித்ரா, பூர்ணிமா, விஜய் வர்மா, மணி, விஷ்ணு, ரவீனா, நிக்சன், ஐசு, அக்ஷயா, விக்ரம், அனன்யா, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், கூல் சுரேஷ், ஜோவிகா, விணுஷா, பவா செல்லத்துரை ஆகிய போட்டியாளர்கள் முதலில் உள்ளே நுழைந்தனர்.
பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அர்ச்சனா, தினேஷ், அன்னபாரதி, பிராவோ, கானா பாலா ஆகியோர் சென்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வந்தனர். பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விஷயம் இந்த சீசனில் சர்ச்சையானது. 16 லட்சம் பணப்பெட்டியை எடுத்து பூர்ணிமா வெளியேறினார். இந்த சீசன் 106 நாட்கள் கடந்த நிலையில் இறுதி போட்டிக்கு முதல் பைனலிஸ்ட்டாக விஷ்ணு நுழைந்தார்.
தொடர்ந்து அர்ச்சனா, மாயா, மணி, தினேஷ், விஜய் வர்மா ஆகியோர் தேர்வாகினர். இறுதியாக விஜய் வர்மாவும் வெளியேறினார். இறுதிப்போட்டி பிரம்மாண்டமாக போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு வித திறமைகளின் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது.
இறுதியாக மக்கள் ஓட்டளித்த வாக்குகளின் படி அர்ச்சனா வெற்றியாளராக தேர்வானார். வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்து டைட்டில் பட்டதை வென்ற முதல் போட்டியாளர் அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தை மணியும், மூன்றாம் இடத்தை மாயாவும் பெற்றனர்.
டைட்டில் பட்டம் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் கார் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.