Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா | முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கமல்ஹாசன் 237' ; திடீர் அறிவிப்பு ஏன்?

14 ஜன, 2024 - 12:20 IST
எழுத்தின் அளவு:
Kamal-Haasan-237-;-Why-the-sudden-announcement?

கமல்ஹாசன் இளம் கதாநாயகனாக நடித்த போது கூட இப்படி அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு தற்போது புதுப்புது அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

2022ல் வெளிவந்த 'விக்ரம்' படம் மூலம் பெரும் வசூலைப் பெற்றார் கமல்ஹாசன். அந்தப் படம் கொடுத்த உத்வேகம் அவரை அடுத்தடுத்து புதிய படங்களைத் தயாரிக்கத் தூண்டியது.

கடந்த வருடம் செப்டம்பர் 5ம் தேதி இயக்குனர் வினோத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள 233வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள். விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றிச் சொல்லும் படமாக அப்படம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின.

அதற்கடுத்து நவம்பர் 6ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக அவரது 234வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பெயரை 'தக் லைப்' என அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள்.

இரண்டு மாத இடைவெளியில் ஜனவரி 12ம் தேதி, கமல்ஹாசனின் 237வது படமாக ஸ்டன்ட் இயக்குனர் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இப்படி ஆறு மாதங்களுக்குள் கமல்ஹாசனின் மூன்று படங்கள் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. இவற்றோடு 'கல்கி 2898 எடி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்பதும் பட்டியலில் கூடுதலாக இணைந்தது.

வினோத் இயக்கத்தில் நடிக்கவிருந்த 233வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. 234வது படமான 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் 237வது படத்தின் அறிவிப்பும் வந்தது திரையுலகிலும ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக சொல்லப்பட்ட 233வது படம் நடக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள். வினோத் கொடுத்த முழு ஸ்கிரிப்ட்டில் கமல்ஹாசன் திருப்தியாகவில்லை. சில மாற்றங்களைச் செய்த பின்பும் அது குறித்த தனது அதிருப்தியை கமல்ஹாசன் வெளிப்படுத்தியதாகவும் அதனால் அந்தப் படம் கைவிடப்படும் சூழலில் உள்ளதாகவும் சொல்கிறார்கள். அதனால்தான் அன்பறிவ் இயக்கத்தில் 237வது படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாம். 233வது படம் எப்போது ஆரம்பமாகும் என்பது கமல்ஹாசன் ஒருவருக்கு மட்டுமே தெரியும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் ‛தி கோட்' படத்தின் ஓடிடி விற்பனை 125 கோடியா?விஜய்யின் ‛தி கோட்' படத்தின் ஓடிடி ... சிங்கப்பூர் சலூன் படத்திற்கு யு சான்றிதழ்! சிங்கப்பூர் சலூன் படத்திற்கு யு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)