முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் நிகழ்ச்சி உள்பட எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். அதிக பணம் கிடைக்கும் கடைத் திறப்பு விழாக்களில் கலந்து கொள்வார். சமீபகாலமாக தான் தொடங்கியுள்ள சில வியாபார நிறுவனங்களின் புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
அந்த வைகையில் தான் தொடங்கி உள்ள வியாபாரத்தின் புரமோசன் நிகழ்ச்சி ஒன்றை சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இதுவரை நான் நாப்கின் பற்றி பேசியது கிடையாது. ஆனால் இன்று இந்த விழாவில் இவ்வளவு ஆண்கள், பெண்களுக்கு மத்தியில் நாப்கின் பற்றி பேசுகிறேன் என்றால், அதுவே பெரிய மாற்றம்தான். பல பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இன்னும் இல்லை. அவர்களும் விழிப்புணர்வு பெற வேண்டும். இந்த தொழில் மூலம் லாபம் வருவது சுயநலம்தான் என்றாலும், அதில் பெண்களுக்கான பொதுநலம் கலந்து இருக்கிறது. பெண்கள் நன்றாக இருந்தால் சமூகம் நன்றாக இருக்கும்.
எனக்கு பின்னால் என்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உள்ளார். அவரை நான் சந்தித்தது முதல் எனக்கு துணையாகவே உள்ளார். என்னை யாரும் கேள்வி கேட்கவில்லை என்றால் அதுதான் எனக்கு பெரிய விஷயம் என நினைத்து இருந்தேன். ஆனால் எந்தவொரு செயலாக இருந்தாலும், இதோடு ஏன் நிறுத்தி விட்டீர்கள். இதை நீங்கள் ஏன் செய்யவில்லை. நான் செய்யும் விஷயங்களை இன்னும் நல்லா செய்யலாமே என்று என்னிடம் கேட்பவர்தான் என்னுடைய கணவர். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் உள்ளது போல், சாதித்த ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாலும், மகிழ்ச்சியாக வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாலும் ஒரு ஆண் கண்டிப்பாக இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.