குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தமிழ் சினிமாவில் விஷால், சிம்பு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் சிலர் இன்னும் திருமணம் செய்யாமல் பேச்சுலர்களாகவே வலம் வருகின்றனர். அவர்களுக்கு துணையாக இசையமைப்பாளரும் நகைச்சுவை நடிகருமான பிரேம்ஜி அமரனும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவரது அண்ணனும் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் பிரேம்ஜி.
இந்த நிலையில் இந்த வருடம் நிச்சயம் தனது திருமணம் நடக்கும் என புத்தாண்டு தினத்தன்று சோசியல் மீடியாவில் நம்பிக்கை தரும் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார் பிரேம்ஜி. இதனையடுத்து அவர் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அவர் தன்னைவிட 22 வயது குறைந்தவரான பின்னணி பாடகி வினைதா சிவகுமார் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்கிற தகவலும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2021ல் பிரேம்ஜி அமரனின் பிறந்தநாளன்று காதல் பொங்கி வழியும் விதமாக வினைதா சிவக்குமார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்த அவரது சோசியல் மீடியா பதிவும் இவர்களது காதலை உறுதி செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் பிரேம்ஜி தரப்பிலிருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.