அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கேப்டன் மில்லர்'. அடுத்த வாரம் ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது.
'ராக்கி, சாணி காயிதம்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், முன்னணி கதாநாயகனாக தனுஷை வைத்து ஒரு சுதந்திர போராட்ட காலத்து கதையைச் சொல்லியிருக்கிறார்.
“பசியோட சுத்திட்டிருக்கிற ஒரு சிங்கத்துக்கு ஒரு இரை கிடைக்குது. அதை எப்படியாவது தூக்கிட்டு போயிடலாமுனு ஒரு கழுதைப் புலி கூட்டமே அலையுது, அப்போ அந்த இரையை ஒரு ஓநாய் தூக்கிட்டுப் போனா என்ன ஆகும்,” என டிரைலரின் முடிவில் இடம் பெறும் பின்னணிக் குரல்தான் இந்தப் படத்தின் கதையாக இருக்கப் போகிறது.
யார் சிங்கம், யார் கழுதைப் புலி, யார் ஓநாய் என்பதுதான் 'கேப்டன் மில்லர்' கதாபாத்திரங்களில் இருக்கப் போகும் பரபரப்பு.
தனுஷின் வித்தியாசமான தோற்றமும், நடிப்பும், ஆவேசமும் 'வேற லெவல்' என அவரது ரசிகர்கள் இந்நேரம் ஆரம்பித்திருப்பார்கள், உண்மையும் அதுதான். சிவராஜ் குமார் சில வினாடிகள் மட்டுமே டிரைலரில் வந்து போகிறார். பிரியங்கா மோகன் ஆச்சரியப்பட வைப்பார் எனத் தெரிகிறது. சந்தீப் கிஷனுக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது.
சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவு, ஜிவி பிரகாஷின் பின்னணி இசை, ராமலிங்கம் கலை இயக்கம் ஆச்சரியப்பட வைக்கிறது. நம்மை அந்தக் காலத்திற்கே படம் அழைத்துச் செல்லும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இருப்பினும், தமிழில் கடந்த வருடம் வந்த 'ஆகஸ்ட் 16, 1947', மலையாளத்தில் 2021ல் வெளிவந்த 'மரைக்காயர்' படங்களை இப்படத்தின் சில காட்சிகள் ஞாபகப்படுத்துகிறது.
மேக்கிங்கில் மிரட்டிய அளவிற்கு, கதையிலும் அழுத்தமும் மிரட்டலும் இருந்தால் வித்தியாசமான படம், சிறப்பான முயற்சி என 'கேப்டன் மில்லர்' பொங்கல் போட்டியில் 'கப்' அடிக்க வாய்ப்புகள் அதிகம்.