இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி | நடிகையை கடத்தி துன்புறுத்த திலீப் தான் பணம் கொடுத்தார் : முதல் குற்றவாளி பல்சர் சுனில் பரபரப்பு பேச்சு |
பரியேறும் பெருமாள் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் மாரி செல்வராஜ் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்து விட்டார். தனது இரண்டாவது படமாக தனுஷை வைத்து இவர் இயக்கிய கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மாமன்னன், வாழை என அவர் படங்களை இயக்கிய நிலையில் அடுத்ததாக மீண்டும் தனுஷ் படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு கடந்த வருடமே அதிகாரப்பூர்வமாக வெளியானது.. இந்த நிலையில் இந்தப் படம் தனக்கு ஒரு லைப் டைம் செட்டில்மெண்ட் படம் போல இருக்கும் என்று கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரி செல்வராஜ் மேடையில் பேசும்போது, “கர்ணன் படத்தை தொடர்ந்து அதைவிட மிகப்பெரிய படம் ஒன்றை கொடுக்க வேண்டும் என தனுஷ் விரும்பினார். அந்த படம் நிச்சயமாக லோகேஷ் கனகராஜுக்கு கைதி, விக்ரம் படங்கள் எப்படியோ அதுபோல எனக்கு ஒரு லைப் டைம் செட்டில்மென்ட் படமாக இருக்கும்” என்று கூறினார்.