AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
கடந்த ஆண்டில் வெளியான 'அயோத்தி' படம் பரவலான பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக அதில் சிறப்பாக நடித்த பிரீத்தி அஸ்ரானியின் நடிப்பு பேசப்பட்டது. சென்னையில் நடந்த சர்வதே திரைப்பட விழாவில் 'அயோத்தி' சிறந்த படமாகவும், பிரீத்தி அஸ்ரானி சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரீத்தி அஸ்ரானி சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருந்தார்.
என்றாலும் ஒரு வெற்றி படத்தில் நன்றாக நடித்த பிறகும் அடுத்த சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் பிரீத்தி. 'டாடா' படப் புகழ் கவின் தற்போது 'ஸ்டார் 'என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் 'கிஸ்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கவின் ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என் தெரிகிறது.