தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த 2015ம் ஆண்டு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த அறம் என்ற படத்தை இயக்கியவர் கோபி நயினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் அகரம் காலனி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் நடைபெற்று வந்தது. அப்போது அகரம் காலனி படத்தின் லைட்மேன் சண்முகம் என்பவர் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு தளத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். அதையடுத்து அவரை படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். இந்த சம்பவத்தை அடுத்து சண்முகத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.