டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
நடிகர் ரஜினி தற்போது 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி உள்ளது. ஏற்கெனவே அங்கு முகாமிட்டிருக்கும் படக்குழு ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கி வந்தனர்.
இந்த நிலையில் தனது போர்ஷனில் நடிப்பதற்காக ரஜினி சென்றுள்ளார். நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். ரஜினிகாந்த் வருவதாக தகவல் அறிந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் விமான நிலையம் வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் படப்பிடிப்புக்கு புறப்பட்டுச் சென்றார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகள் எதையும் அவர் பார்வையிடவில்லை. பெரும் துயரத்தில் இருக்கும் மக்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே ரஜினி நடித்துக் கொண்டிருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.