ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
கன்னட மற்றும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக திகழ்ந்த ஸ்டன்ட் இயக்குனர் ஜாலி பாஸ்டின் (58) மாரடைப்பால் இன்று(டிச., 27) காலமானார்.
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜாலி பாஸ்டின் 1987ல் தனது 17 வயதில் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் நடித்த பிரேமலோகா என்ற படத்தில் ஸ்டன்ட் கலைஞராக அறிமுகமானார். பல ஆண்டுகள் சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக வலம் வந்த இவர் 1995ல் ரவிச்சந்திரனின் புட்நஞ்ஜா படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் சுமார் 900 படங்களுக்கு மேல் ஸ்டன்ட் காட்சிகள் அமைத்துள்ளார்.
மேலும் இயக்குனராகவும் வலம் வந்த இவர் தமிழில் லாக் டவுன் டைரிஸ் என்ற படத்தை இயக்கினார். ரஜினி, சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால், ரவிச்சந்திரன், சிவராஜ்குமார், உபேந்திரா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் பணியாற்றி உள்ளார். நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
மறைந்த ஜாலி பாஸ்டினுக்கு கன்னட திரையுலகினர் மற்றும் தென்னிந்திய கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.