ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவரது அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது குறித்து நெல்சன் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் அவர் பேசும்போது, ‛‛ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். இந்த படத்தில் நடிப்பதற்கு சில முக்கிய நடிகர்களிடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் யார் என்பது முடிவாகவில்லை. என்றாலும் ஒரு மாதத்திற்குள் எனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்'' என்றார் நெல்சன். தனது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை என்றாலும் தனுஷின் 51வது படத்தை தான் அடுத்து அவர் இயக்கப் போகிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.