டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்ட எம்புரான் பட டிரைலர் | மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் | ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? | ரஜினி சந்திப்பு பற்றி பிருத்விராஜ் நெகிழ்ச்சி | 700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'அரபிக் குத்து' | அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா |
ஏஐ தொழில் நுட்பத்தில் பேசிய வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பார்த்திபன். அதில், ஏஐ பார்த்திபன் பேசும்போது, கேயார் அவர்கள் என் மீதும், என் சினிமா ஏதும் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது சமீபத்திய படமான ஆயிரம் பொற்காசுகள் படத்திற்கு புதிய யுக்தியை பயன்படுத்தி இருக்கிறார். அதாவது, ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்றும் அவர் அறிவித்துள்ளார். முதல் நாளில் பெருவாரியான ரசிகர்கள் இந்த படத்தை காண வேண்டும் என்பதால் அவர் இப்படி ஒரு ஐடியாவை செய்திருக்கிறார்.
இந்த விளம்பரத்தை பார்க்கும்போது எனக்கு சரிகமபதநி படத்திற்காக நான் ஒட்டிய ஐம்பதாவது நாள் போஸ்டரில், அப்பாடா என்று எழுதியதும், அதன்பின் கே.பாலசந்தர் அவர்கள் என்னை பாராட்டி ஏழு பக்கங்களில் கடிதம் எழுதியதும் ஞாபகத்துக்கு வந்தது. சின்ன பட்ஜெட் படங்கள் மக்களை சென்றடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும். ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எப்படி எல்லாம் பாடுபட வேண்டும் என்ற வலி அந்த அறிவிப்பில் உள்ளது என்ற வருத்தம் இருந்தாலும், இது போன்ற யுக்தி மூலம் மக்களை நல்ல படங்கள் சென்றடைய ஒரு காரணமாக இருக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார் பார்த்திபன். ஏஐ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட பார்த்திபன் பேசும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.